காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை : டிரான் அலஸ் அறிவிப்பு
இலங்கையில் நடைபெறும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நாளை (17) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த காவல்துறையினருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் அண்மை நாட்களில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் விநியோகம் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரிக்கும் குற்றங்கள்
அத்துடன், அதிகளவான திட்டமிட்ட குற்றங்களும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அவர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தத் தரப்பினரினருக்கும் இடமளிக்க போவதில்லையெனவும், டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |