தமிழ் அரசியல் தலைவர்களுக்கு முக்கிய செய்தி
Parliament of Sri Lanka
TNA
Suresh Premachandran
Sri Lankan political crisis
By Vanan
தமிழ் அரசியல் தலைவர்களின் ஒன்றிணைவு
தமிழ் மக்களின் நலன்களுக்காக எதிர்காலத்திலேனும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் அரச தலைவரை தெரிவு செய்யும் விடயத்திலும் தமிழ் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச தலைவர் தெரிவு

அரச தலைவர் தெரிவின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
ஆனால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி