சந்திரிக்காவுக்கு முக்கிய பதவி : வெளியாகிய தகவல்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நேற்று(6) இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் திஸர குணசிங்க தெரிவித்தார்.
பொதுத் தேர்தல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் பரந்த கூட்டணியுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.
[QJUSQJP ]
பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25 வீத பிரதிநிதித்துவமும் செயற்குழுவில் 50 வீத அதிகாரமும் கிடைக்கும் என திஸர குணசிங்க கூறியுள்ளார்.
பொதுச் செயலாளர்
அத்துடன், பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய உறுப்பினர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கட்சியின் பொதுச் செயலாளராக புதிய உறுப்பினரொருவரும் தெரிவு செய்யப்படவுள்ளதாக திஸர குணசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |