ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது : மக்களிடம் கேட்டறிந்த ரிஷாட் பதியுதீன்
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) உயர்பீடம் எடுக்கின்ற முடிவிற்கு ஒத்துழைப்பை தருவதாக புத்தளம் (Puttalam) மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து நடத்திய கலந்துரையாடலின் போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் நேற்று இரவு (10) புத்தளத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது தொடர்பில் ரிஷாட் பதியுதீன் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதன்போது நாட்டினுடைய நலன், நாட்டினுடைய பொருளாதாரம் அதேபோல் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாடு மற்றும் ஆதரவைத் தேடி நிற்கின்ற இரண்டு வேட்பாளர்களில் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என இங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும் இறுதியாக எதிர்வருகின்ற 14ஆம் திகதி மக்கள் காங்கிரஸினுடைய உயர்பீடம் எடுக்கின்ற முடிவிற்கு ஒத்துழைப்பை தருவதாக மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |