ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், இன்று (20)அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை இன்று சந்தித்தை தொடர்ந்து, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அலி சப்ரியின் அழைப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து இருதரப்பு விவாதங்களை நடத்தியிருந்தார்.
#Iran’s Foreign Minister @Amirabdolahian meeting with his Sri Lankan counterpart @alisabrypc in Colombo on Tuesday. pic.twitter.com/ehrlLwaplm
— IRNA News Agency (@IrnaEnglish) February 20, 2024
இதனை தொடர்ந்து, ஈரான் வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு பயணம் செய்யுமாறு அலி சப்ரி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார்.
அரச சந்தி்ப்பு
சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுக்கும் அவர், இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
The Iranian Foreign Minister Dr. @Amirabdolahian, who is on an official visit to #SriLanka, called on President @RW_UNP at the Presidential Secretariat.@SLinIran @IRANinSriLanka #DiplomacyLK #LKA #PMD pic.twitter.com/tOOCfUWrhR
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) February 20, 2024
அத்துடன், நாளைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம், எரிசக்தி அமைச்சு, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் இலங்கையை சென்றடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |