தலைநகரில் பாரிய போராட்டம்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்(படங்கள்)
சிறிலங்கா ரெலிகொம் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொழும்பில் உள்ள சிறிலங்கா ரெலிகொம் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்போது, ஊழியர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களது வரப்பிரசாதங்கள் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
கலகத் தடுப்பு பிரிவினர்
இதேவேளை, பெருமளவான காவல்துறையினர் மற்றும் கலகத் தடுப்பு பிரிவினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம், காலி உள்ளிட்ட இலங்கையின் அனைத்து பாகங்களிலும் பணியாற்றும் ரெலிகொம் ஊழியர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |