வசந்த முதலிகேக்கு சரீரப் பிணை - 12 ஆம் திகதிவரை விளக்கமறியல்..! நீதிமன்றம் உத்தரவு
Colombo
SL Protest
By pavan
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (6) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
12 ஆம் திகதிவரை விளக்கமறியல்
எவ்வாறாயினும் மற்றுமொரு வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்