தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தொடருந்துப் பெட்டிகள் இன்மையால் 4 தொடருந்து சேவைகளை இரத்துச் செய்ய தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என தொடருந்துத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கச்சத்தீவைப் பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடும்! மோடியின் கருத்துக்கு இலங்கையின் பதிலடி
கோட்டையில் இருந்து பயணிக்கும் தொடருந்து
இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.02க்கு கொழும்பு – கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும், ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு - கோட்டை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவைகளும் இரத்தாகியுள்ளன.
அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை தொடருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும் கொழும்பு – கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் தொடருந்து சேவையும் இரத்தாகியுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |