நாட்டின் பாதுகாப்பு குறித்து இலங்கை-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை!
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன (Kamal Gunaratne), ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளரைச் சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான 12வது சர்வதேச கூட்டத்தில் கலந்துகொண்ட போதே இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இரு செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.
பாதுகாப்பு சவால்கள்
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை இதன்போது வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதுமாத்திரமன்றி பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 12வது சர்வதேசக் கூட்டம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கூட்டாண்மைகளை உருவாக்கவும் இந்தக் கூட்டம் பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நாடுகள் எதிர்கொள்ளும் அழுத்தமான பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு தளமாக விளங்கியதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |