பலஸ்தீன விவகாரம் தொடர்பாக இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும்: மகிந்த ராஜபக்ச
பலஸ்தீன மக்களுக்காக இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய (14) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பலஸ்தீன மக்கள் இன்று சொல்லெண்ணா துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பலஸ்தீன மக்களின் உரிமை
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தியமைக்கு நான் இந்த உயரிய சபைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
பலஸ்தீன இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஊடாக எம்மால் அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடிந்தது.
பலஸ்தீன விவகாரம்
இஸ்ரேலிய தாக்குதலினால் மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் 50 லட்சம் பலஸ்தீன மக்கள் வெளியேறியுள்ளனர்.
பலஸ்தீன விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் நாடு என்ற ரீதியில் இலங்கையும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
Sri Lanka officially recognized Palestine as a separate state in 1988. War is not a solution to this crisis. A large number of children die as a result of the conflict, while many others sustain injuries. Attacks on Palestine have debilitated the lives of civilians. -… pic.twitter.com/zdP0I5P8fq
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) May 14, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |