திருத்தப்படவுள்ள புதிய சட்டம்! அலி சப்ரி தகவல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் புதிய வரைபை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கடந்த 2 நாட்களாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற சம்பிரதாயங்கள்
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மரித்து எழுந்தவர்களை போல் சிலர் பேசுகிறார்கள்.
இலங்கையில் தற்போது தீர்வு காண வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன. ரூபாவின் பெறுமதி, பணவீக்கம், வங்கிகளின் வட்டி வீதங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தற்போது இலங்கையில் உள்ளன.
இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தற்போது சபாநாயகருக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய சட்டம்
இலங்கையில் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் முழு அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அதனை சான்றுரைக்க மாத்திரமே சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.
இணையவழி பாதுகாப்பு சட்டம் தொடர்பில் நீதிமன்றத்தால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்த சட்டத்தில் உள்ள சில சரத்துக்களின் நடைமுறையை மாத்திரம் தடை செய்யுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்த நிலையில், குறித்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதனை சான்றுப்படுத்த சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.
சபாநாயகரின் பொறுப்பு
அரசியலமைப்புக்கமைய அவருக்கு குறித்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் சிக்கல்கள் இருக்கின்றன.
The #Speaker is absolutely irreproachable. I have the minutes of the Constitutional Council. It's possible that some lawyer instructed them to abstain from voting, creating a crisis by violating their own regulations, the Constitution, and the submissions made earlier, since the… pic.twitter.com/grlPlozl8d
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) March 21, 2024
அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனினும், நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது இதற்கு தீர்வல்ல.
தற்போது இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகிறோம்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |