ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் : அதிபர் ரணில் விக்ரமசிங்க

COVID-19 Ranil Wickremesinghe Sri Lanka China
By Sathangani Nov 11, 2023 03:48 AM GMT
Report

இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம் வரை இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் பொற்காலமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை உலகளாவிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கையின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!


 உலகளாவிய புவிசார் அரசியல்

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்ற பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் : அதிபர் ரணில் விக்ரமசிங்க | Sl Take Lead Debt Relief For Low Income Countries

இங்கு, சர்வதேச உறவுகள் தொடர்பான சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள், உயர் டிப்ளோமா படிப்புகள் மற்றும் பட்டப்பின் படிப்பு பாடநெறிகள் ஆகிய நிலைகளில் கற்கைகளை முடித்த 390 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், 2020, 2021, 2022, 2023 ஆகிய கல்வி ஆண்டுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கடன் நெருக்கடி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தாமதம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட கொவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து  அதிபர் ரணில் விக்ரமசிங்க இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியலில் அதன் தாக்கத்திலிருந்து எழும் சிக்கலான தன்மையையும் அதிபர் குறிப்பிட்டார்.

காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் : வொல்கர் டேர்க்

காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் : வொல்கர் டேர்க்


அதிகாரப் போட்டி

தற்போதைய நிலைமையை “உலகளாவிய பலதரப்பு நெருக்கடியின் புவிசார் அரசியல்” என்று அழைத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, கொவிட் 19 தொற்றுநோய், கடன் நெருக்கடி, காலநிலை மாற்றம், வர்த்தக பிரச்சினைகள் மற்றும் பிராந்திய மோதல்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சவால்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் : அதிபர் ரணில் விக்ரமசிங்க | Sl Take Lead Debt Relief For Low Income Countries

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அணுகுமுறை இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியான் அமைப்பின் நோக்குடன் சமநிலைப்படுவதாகத் , இந்த சமுத்திரங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பெரும் சமுத்திரங்களாக தனித்தனி அடையாளங்களைக் கொண்டிருப்பதாகவும் வலியுறுத்தினார்.

ஆசிய-பசுபிக் கருத்தாக்கத்தை சீனா விரும்புவதாகவும், ஒரு பெல்ட் ஒரு சாலை எண்ணக்கருவின் மூலம், பசுபிக் சமுத்திரத்தையும் இந்து சமுத்திரத்தையும் இணைத்துள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

கொடிகாமத்தில் பாரிய விபத்து: யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து முற்றாக சேதம் ( படங்கள்)

கொடிகாமத்தில் பாரிய விபத்து: யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து முற்றாக சேதம் ( படங்கள்)


இந்த அனைத்து சூழ்நிலைகளிலும் கூட, பெரும் அதிகாரப் போட்டி இல்லாத இடமாக இந்து சமுத்திரத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கடன் நிவாரணம்

ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் என்று தெரிவித்த அதிபர் , காலநிலை மாற்றத்தை குறைப்பதற்காக வெப்பமண்டல பிராந்தியத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் : அதிபர் ரணில் விக்ரமசிங்க | Sl Take Lead Debt Relief For Low Income Countries

இந்த விடயங்கள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திக்கொள்ளும் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அதிபர் இங்கு சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய வர்த்தக முறையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை என்றும் வலியுறுத்தினார்.

காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கவலை தெரிவித்த அதிபர், ஹமாஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை அழிப்பதன் மூலம் மாத்திரம் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்றும், மேலும் அது தீவிரமடைவதைத் தடுக்க உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள எபெக் (APEC) உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் சீ ஜிங் பிங் ஆகியோருக்கு இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பின் ஊடாக தற்போதைய நிலைமையைத் தணிக்க சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும்  குறிப்பிட்டார்.

இந்த உலகளாவிய சிக்கல்களைக் கடந்து செல்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024