வட மாகாண ஆளுநரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினர்

Sri Lanka Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Sathangani Dec 15, 2023 11:19 AM GMT
Report

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போது வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பற்றிக் நிரஞ்சனும் சமூகமளித்திருந்தார்.

மீண்டும் மொட்டுக்கட்சியின் தலைவரானார் மகிந்த

மீண்டும் மொட்டுக்கட்சியின் தலைவரானார் மகிந்த

புதிய அதிபர் நியமனம் 

இதேவேளை புதிய அதிபர் நியமனத்தால், இதுவரை பதில் கடமை ஆற்றியவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், கடினமான காலப்பகுதியில் பாடசாலை சமூகத்தை கட்டியெழுப்ப பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் | Sl Teachers Association Met The Governor Of Np

போட்டிப் பரீட்சையூடாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இதனால் பல வருடங்களாக பதில் கடமை புரிந்த அதிபர்கள், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில் ஏனைய மாகாணங்களில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த விடயங்களை கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், தேவை ஏற்படின் அதிபரின் கவனத்திற்கும் விடயங்களை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கிய மற்றுமொரு சீன கப்பல்: தற்போதைய நிலைப்பாடு

இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கிய மற்றுமொரு சீன கப்பல்: தற்போதைய நிலைப்பாடு

பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் 

வடக்கு மாகாணத்தில் உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், சில ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சிக்கல் காணப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் | Sl Teachers Association Met The Governor Of Np

அத்துடன் பாடசாலைகளில் காணப்படும் அபாயகரமான கட்டடங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மாணவர்களுக்கான போசாக்கு திட்டம், தொண்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

பாடசாலைகளில் காணப்படும் அபாயகரமான கட்டடங்கள் தொடர்பில் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும், ஒரு சில கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது வடக்கு மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் உள்ள உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் தவிர, ஏனைய ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலதிகமாகவே காணப்படுவதாகவும் ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, இடமாற்றக் கொள்கை படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்! போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் (படங்கள்)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்! போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் (படங்கள்)

உறுதியளித்த ஆளுநர் 

ஆசிரியர் இடமாற்றத்தில் எவ்வித பாரபட்சமும் தேவையில்லை எனவும், இடமாற்றக் கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது ஆளுநர் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் | Sl Teachers Association Met The Governor Of Np

இந்த விடயம் குறித்து கல்வித்துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும், வழங்கப்படும் பணிப்புரைகளை செயற்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், மாகாண கல்விச் செயலாளருக்கு, வட மாகாண ஆளுநர் அறிவித்தார்.

அத்துடன் மாணவர்களுக்கான போசாக்கு திட்ட முன்மொழிவுகள் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்த உடன் அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் சில பிரச்னைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருப்பதால் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026