இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல ட்ரோன் விமான சேவை : வெளியான தகவல்
நாட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பத்தில் இதுவொரு சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளன
இந்தச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அந்த நாடுகளின் வெற்றிகரமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |