இலங்கைக்கு கிட்டிய 4 வருட நிதியுதவி திட்டம்
சர்வதேச நாணயநிதியம் ஏப்ரல் 20ஆம் திகதி இலங்கைக்கான நான்கு வருட நிதியுதவி திட்டத்திற்கு அனுமதி வழங்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறிய அவர், நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தனக்கு கடன் வழங்கிய இந்தியா, சீனா உட்பட அனைத்து முக்கிய நாடுகளிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களை பெற்றுள்ள நிலையில், இதற்கான அனுமதி கிட்டவுள்ளது.
கடன் மறுசீரமைப்பு மூலோபாயம்
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சர்வதேச நாணய நிதியம் ஆறு மாத்திற்கான முழுமையான பிணையெடுக்கும் பொதி குறித்து ஆராய்வதற்கு முன்னர் இலங்கை ஏப்ரல் மாதம் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை அறிவிக்கும் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்.
ஏழு தசாப்த காலத்தில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொண்ட பல மாத முயற்சிகளின் விளைவே சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி பணியாளர் மட்ட உடன்படிக்கை வெளியானவுடன் அதனை பார்த்தீர்கள் என்றால் அதில் கடன் மறுசீரமைப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு காணப்படும், அதில் எங்களின் நடுத்தர கால இலக்குகளும் காணப்படும்.
இதன் காரணமாக நாங்கள் ஏப்ரல் மாதத்தில் நீண்டகால நடுத்தர இலக்குகளை எப்படி அடையப்போகின்றோம் என்பதை அறிவிப்போம்” - எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
