கோட்டாபயவின் அவசர கூட்டத்தை புறக்கணித்தது மைத்திரி தரப்பு
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் அந்த கலந்துரையாடலை மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சி புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் மிரிஹானவில் நேற்றிரவு ஏற்பட்ட போராட்டம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த கலந்துரையாடலை புறக்கணித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சி தனது மத்திய செயற்குழுக் கூட்டத்தை அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது நடத்தி வருகிறது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்