சிறிலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் விஜயதாசவிற்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயற்படுவதைத் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
மேலும், தற்காலிக தலைமைச் செயலர் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த தடை விதித்து நீதிமன்றம் மற்றொரு தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
முறைப்பாடு
அத்துடன், அமைச்சர்களான மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கமைய கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன்விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை உத்தரவை நீடிப்பு
மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.
அத்தோடு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை உத்தரவை நீடிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |