சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச: மைத்திரி பகிரங்கம்
SLFP
Dr Wijeyadasa Rajapakshe
Maithripala Sirisena
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) போட்டியிடுவார் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் மைத்திரிபால சிறிசேன, விஜயதாச ராஜபக்சவுக்கு கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு உள்ளது.
சத்தியப்பிரமாணம் செய்த மைத்திரி
நான் இம்முறை சத்தியப்பிரமாணம் செய்யும் போது மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று சொன்னேன். விஜயதாச ராஜபக்ச தான் இம்முறை போட்டியிடுவார்.
நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம். அவர் இப்போது எம்மவர். இப்போது அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை்“ என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
மரண அறிவித்தல்