பசில் ராஜபக்ச அதிபராக வேண்டும்! மொட்டு கட்சியின் கோரிக்கை
எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ச களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பசில் ராஜபக்ச
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது "பசில் ராஜபக்ச அதிபராக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன.
அவர் இந்நாட்டில் வேலை செய்து காட்டியவர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பசிலைப் பற்றி கேளுங்கள்.
அதிபர் பதவி
ஆகவே அவர் அதிபர் பதவிக்கு வருவதில் உள்ள தவறு என்ன? வேலை செய்து காட்டிய தலைவருக்குப் பதவி வழங்கப்படுவதே மிக பொருத்தம். அதற்கு தகுதியான நபரே பசில் ராஜபக்ச.
அதேவேளை, நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவர். அவர் மொட்டுக் கட்சியை பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே நாமலுக்கு எதிராகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |