ரணிலை தூக்கியெறிந்த மகிந்த தரப்பு!! பதவியும் பறிபோகும் நிலை
வெளி வேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதால், அக்கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமே தவிர, வெளி வேட்பாளரை அல்ல என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அவர், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம் எனக் கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் அதற்கு மிகவும் பொருத்தமானவர்.
ரணிலுக்கே ஆதரவு
கட்சி என்ற வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன வேறு எந்த வேட்பாளரையும் அதிபர் பதவிக்கு ஆதரிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்றார்.
இதேவேளை, அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 16 மணி நேரம் முன்
