ரணிலுக்கு நிரந்தர வாய்ப்பு! மகிந்த தரப்பு எடுத்த திடீர் முடிவு - வெளியான அறிவிப்பு
SLPP
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
மகிந்த தரப்பு எடுத்த திடீர் முடிவு
எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்சியின் தீர்மானத்தை சற்றுமுன் அறிவித்துள்ளார்.
பெரும்பான்மையை தம்வசம் வைத்துள்ள மகிந்த தரப்பு ரணிலுக்கான ஆதரவை தெரிவித்துள்ளமை ரணிலின் இருப்பை தக்கவைக்க வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கு நிரந்தர வாய்ப்பு
இது ஒரு புறமிருக்க, அக்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தானும் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
இதனால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுநிலைக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிய வருகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி