ரணிலை சிறிலங்காவின் நிரந்தர அதிபராக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
SLPP
Dullas Alahapperuma
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
ரணிலை நிரந்தர அதிபராக்க யோசனை
பதில் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தின் ஊடாக நிரந்தர அதிபராக தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இன்று(15) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இந்த வைத்து ரொஷான் ரணசிங்க இதனை முன்வைத்தாலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
டளஸ் அழகப்பெருமவும் பரிந்துரை
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவை பரிந்துரைத்துள்ளனர்.
இதன் காரணமாக கூட்டத்தில் பரபரப்பான வாத விவாதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி