பொதுஜனபெரமுனவின் ஆதரவுடன் சிறிலங்காவின் நிரந்தர அதிபராகிறார் ரணில்
நிரந்தர அதிபராக்கும் நடவடிக்கை
கோட்டாபய ராஜபக்ஷ சிறிலங்கா அதிபர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, எஞ்சியிருக்கும் அந்த பதவிக்கான காலத்தை பிரதியீடு செய்வதற்கான நபரை தெரிவு செய்ய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதன்படி ,தற்போது பதில் அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கவை நிரந்தர அதிபராக்கும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதரவை உறுதிப்படுத்திய எம்.பிக்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்குவதற்கு ஏற்கனவே தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் என்பதை அவர்கள் ஏற்கனவே விக்கிரமசிங்கவிடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
