நாமல் ராஜபக்ச கைதால் கொந்தளிப்பு! உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (06-09-2026) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை....
இளைய சமுதாயம்
குறித்த அறிக்கையில், “இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம்.
இந்த நிலையில் நாடு அழிவு பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் 2009 ஆம் ஆண்டு கிடைத்தது.

அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர்.
அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ச எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
பொருட்களின் விலை
நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும். மக்களின் மனங்களை அறியாத அரசாங்கம் இன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.
அன்று பொருட்களின் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முந்தைய ஆட்சி காலங்களை விட பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் நிறைந்து வழிகின்றனர். இன்று நாடே போர்களமாக மாறியுள்ளதுடன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர்.
எனவே இந்த தவறான செயலை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
எமது இளைய தளபதி நாமல் ராஜபக்சவை உடனடியாக விடுதலை செய்யும்படி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening