டக்ளஸ் காலத்தில் மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்தே இப்போது பயணிகள் சேவையில்..!

Sonnalum Kuttram
By Erimalai Sep 06, 2026 01:26 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் தெரிவித்துள்ளார்.

அரச பேருந்துகள் தொடர்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம் தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.

அரச பேருந்தை தள்ளித்திரியும் யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள்

அரச பேருந்தை தள்ளித்திரியும் யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள்

கட்டி இழுக்கப்படும் பேருந்து

காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.

மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சமநேரத்தில் பருத்தித்துறைக்கு பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட் செய்யப்படுகின்றது.

கடந்த வெள்ளிக் கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.

அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி! யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு விளக்கம் கோரல்

அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி! யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு விளக்கம் கோரல்

ரஜீவன் எம்.பி

பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிப்படைந்தனர்.

வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக விடப்பட்ட பேருந்துகள் இவை.

தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம் அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.

சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம் காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்.பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து சேவையை வளங்க வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016