சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தபடியாக மொட்டு கட்சி: வன்னியாராச்சி பெருமிதம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தபடியாக சிறிலங்கா பொதுஜன பெரமுன உலகில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த அதிபர் தேர்தலில் தமது கட்சி ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
அதேவேளை, பொதுஜன பெரமுன அதிபர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதாகவும் ஆனால் இதுவரை அதிபர் வேட்பாளர் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜூன் 18 ஆம் திகதி அறிவிப்பார் என்றும் அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்கும் எனவும் பசில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |