நாமல் ராஜபக்ச ஒரு புறொய்லர் கோழி - விமல் வீரவன்ச கடும் தாக்கு
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புறொய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக தாக்கியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பத்தினது வீழ்ச்சிக்கு

"அவர் ரணிலைப் போன்றவர், அவர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மக்கள் கோபப்படுவது நியாயமானது, அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார், அவர் முன்கூட்டியே வளர்ந்த புறொய்லர் கோழி" என்று அவர் கூறினார்.
நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த உறவுமுறையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்சவை களமிறக்க திட்டம்

கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டலஸ் அழகப்பெருமதான் அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்தார் எனவும் அவர் தெரிவித்தார்.