மகிந்தவின் பிரதமர் பதவி குறித்து மொட்டு எம்.பி கருத்து..!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
தவறான தகவல்கள்
அவ்வாறான விடயம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவில்லை. அவர் பிரதமராக இருந்தார். பிரதமராக இருக்கும் போது, நாட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவின.
அப்போதைய அதிபரால் நாட்டின் நிலமையை சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. அவர் பதவி விலக முடிவு செய்தார் என்று நான் கூறுவேன்.
அவர் பிரதமராக, அதிபராக இருந்து நாட்டை மீண்டும் ஒருங்கிணைத்த ஒரே தலைவர். அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வர விரும்புகிறார் என்று நான் நினைக்கவில்லை. அவை அனைத்தும் தவறான தகவல்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)