ஆளும் தரப்புடன் ரணில் திடீர் சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எதிர்கால திட்டங்கள்
இதன்போது, தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் செயற்பட வேண்டிய விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன அமைச்சு பதவிகள் தொடர்பில் கலந்துரையாடவோ, அது தொடர்பில் கோரிக்கை விடுக்கவோ இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
