ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்! கோட்டை நீதவான் உத்தரவு
இரண்டாம் இணைப்பு
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக உட்பட மேலும் நான்கு நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை (25) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கடந்த 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு தற்பொழுது கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
