அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு
புதிய இணைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) "ஜனசதன" (Janasatana) மக்கள் பேரணி அனுராதபுரத்தில் தற்போது நடைபெறுகின்றது.
இந்தப் பேரணியில் பல முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இக்கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்திற்காக பெருமளவிலான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அங்கு கூடியுள்ளதுடன், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
அநுராதபுரத்தில் மகிந்த தலைமையில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் பேரணி!
சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல்
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என டி.வி. சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக இந்தப்பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்தது.
எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச பேரணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |