அநுரவின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள் : அவதிக்குள்ளான பயணிகள்
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் நடைபெற்ற (16) ஜனாதிபதியின் நிகழ்சிக்காக பருத்தித்துறை சாலையின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவைகளும் நேற்று காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டது போது ஜனாதிபதியின் நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்படுவதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாகவும் தெரிவித்தார்.
பயணிகள் சிரமம்
இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு நாகர் கேவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு சேவையில் ஈடுபடும் பேருந்து சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே சேவையில் ஈடுபடுகின்றது.

இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் தைப்பொங்கல் தினத்திலும் பருத்தித்துறை சாலை தனது சேவையை நிறுத்தி இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவனிடம் ஒருங்கிணைப்புக் குழுக் கூடடங்களில் பலதடவைகள் சுட்டிக்காட்டியும் அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |