பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
சீஸன் பற்றுச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாமல் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் தொடர்பில் முறைப்பாடளிக்க அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த விடயம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1958 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில், இதுபோன்ற தவறான செயல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இது குறித்து இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளுக்கு மற்றும் நடத்துனர்களுக்குத் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
