முன்பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்
மாவனெல்லை (Mawanella) நகர முன்பள்ளி ஒன்றில் தலையில் தேங்காய் விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி மாவனல்லை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மாவனல்லை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.
ரனுலி ஹசத்மா எதிரிமான்ன என்ற சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாய் குடும்ப நலப் பணியாளர் என்றும், அவரது தந்தை அரசு வைத்தியசாலை காவுவண்டி ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை, கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபெற உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |