அமெரிக்காவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்
அமெரிக்காவில் (United States) சிறிய ரக விமானமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் மொண்டானாவில் நேற்று (11) தரையிறங்கிய சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாஷிங்டனின் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து நான்கு பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு தரையிறங்கியுள்ளது.
அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து விமான நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது மோதியுள்ளது.
பெரும் விபத்து
இதில், விமான நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த சில விமானங்களிலும் தீ பரவியுள்ளது.
உடனடியாக செயல்பட்டு விமான நிலைய மீட்புக் குழுவினர் தீயை அணைத்ததுடன் சிறிய ரக விமானத்தில் பயணித்த நான்கு பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விமான நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த விமானங்களில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
