ஹட்டனிலுள்ள ஆடையகமொன்றில் திடீரென தீப்பற்றி எரிந்த கையடக்க தொலைபேசி
ஹட்டனில் (Hatton) உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கையடக்க தொலைபேசியை சோதனை செய்துகொண்டிருந்த போது அது வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19) ஹட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நீண்ட நாட்களாக செயழிழந்து காணப்பட்ட கையடக்க தொலைபேசியின் பேட்டரியை சோதித்து பார்க்குமாறு ஊழியர் ஒருவர் தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
சிசிரிவி காட்சிகள்
அந்த தொலைப்பேசியை சோதனை செய்த போது கையடக்க தொலைபேசியிலிருந்த பேட்டரி வெடித்து அதில் தீப்பிடித்துள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.
கையடக்க தொலைபேசிகளின் பேட்டரிகள் அதிக நேரம் சார்ஜ் செய்யப்படுவதே இதற்கு காரணம் என கையடக்க தொலைபேசி பழுது பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |