கனடா - ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Government of Canada
Canada
Weather
By Thulsi
கனடா (Canada) - ரொறன்ரோவில் நிலவிவரும் பனிப்பொழிவுடனான காலநிலை காரணமாக வாகன சாரதிகள் அவதானமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2 முதல் 4 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள்
சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படும். குறிப்பாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வாகன போக்குவரத்துக்களில் தாமத நிலை ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 20 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்