கனடாவில் தேடப்படுவோர் பட்டியல் : புதிதாக இணைந்த ஐவர்
கனடாவில்(canada) தேடப்படுவோர் பட்டியலில் ஐவர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு புதிதாக அறிவிக்கப்பட்ட ஐவரும் கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அட்ரியன் வோக்கர்(Adrian Walker), கொலைக்காக டொராண்டோ காவல் சேவையால் (டிபிஎஸ்) தேடப்படுகிறார்.
தேடப்படுவோர் பட்டியல்
கேத்தரின் பெர்கெரோன்-பின்சாரோன் (Katherine Bergeron-Pinzarrone), யார்க் பிராந்திய காவல்துறையினரால் கொலைக்காக தேடப்படுகிறார்.
தரம் தலிவால் (Dharam Dhaliwal)கொலைக்காக பீல் பிராந்திய காவல்துறையினரால் தேடப்படுகிறார்.
யாசிர் முகமது(Yasir Mohamed), கொலைக்காக TPS ஆல் தேடப்படுகிறார்.
மொகமட் அப்துல்லாஹி (Mohammed Abdullahi ) கொலைக்காக டிபிஎஸ் ஆல் தேடப்படுகிறார்.
25பேரின் பட்டியல்
இதேவேளை கனடா முழுவதும் தேடப்பட்டு வருவோர் என 25பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு தேடப்பட்டு வரும் பலர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேடப்படுவோர் பட்டியலில் உள்ள 10 பேர் ரொறன்ரோ பெரும்பாக பகுதி காவல்துறையினரால் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப் பொருள் கடத்தல் படுகொலை சம்பவங்கள் என பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு தேடப்பட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |