மாவீரர் நினைவேந்தல் : லவக்குமார் உள்ளிட்ட 19 பேருக்கு தடையுத்தரவு
மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில், சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 09. 20 மணிக்கு கிரானில் வசிக்கும் லவக்குமாரின் வீட்டுக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் இது குறித்த தடையுத்தரவை வழங்கியுள்ளனர்.
19 பேருக்கு தடையுத்தரவு
இதுவொரு மனித உரிமை மீறல் எனவும், தான் பல அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் காவல்துறையினர் இவ்வாறு நடந்துகொள்வது அநாகரிகமான விடயம் எனவும் லவக்குமார் கூறியுள்ளார்.
மாவீரர் நினைவேந்தலைத் தடுக்க சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு இறுதிக் கட்டத்தீவிரங்களை வெளிப்படுத்திவரும் நிலையில், இவர் உள்ளிட்ட 23 பேருக்கு வாழைச்சேனை நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் 19 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவிலும் இவரது பெயர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.