வாக்குமூலம் பெற அழைத்து சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக அவர் இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள்
பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை மற்றும் பொதுமக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் காணொளிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பியத் நிகேஷல கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பியத் நிகேஷல நாளை(30) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி