சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க திட்டமிடும் விசமிகள் - எச்சரித்த தகவல் தொழில்நுட்ப பிரிவு
பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்கள் மற்றும் பல்வேறு இணைய முகவரிகளை பயன்படுத்தி 'போலியாக இலவச பரிசுகளை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரிமாறிக்கொள்வது அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலிச் செய்திகள் மூலம் இணையத் தாக்குதல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் உங்களது முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க முடியும்
இணையத் தாக்குதல் செய்பவர்கள் இதன் மூலம் உங்களின் சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க முடியும் என தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுபோன்ற செய்திகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

