கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் - அரசு எடுத்த நடவடிக்கை
இடைநிறுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.
அதன் பிரகாரம் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, அடுத்த மாதம் முதல் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.
பொருத்தமான கடற்றொழிலாளர்களை அடையாளம்
அதன் முதற்கட்டமாக ஓய்வூதியம் பெறுவதற்குப் பொருத்தமான கடற்றொழிலாளர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
முன்னர் இத்திட்டம் செயலிழந்தபோது, சுமார் 60 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் இதன் பலன்களைப் பெற்று வந்திருந்தனர்.
திட்டம் மீண்டும் தொடங்கும்போது, இதனைவிட அதிகமான கடற்றொழிலாளர்களுக்கு பயனளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

