சூரிய கிரகணத்தன்று என்னவெல்லாம் செய்யகூடாது தெரியுமா..!
இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் நாளை நடைபெறவுள்ள நிலையில் என்னவெல்லாம் கூடாது என சில விடயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
2024ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சுமார் 7 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடிக்கும் இந்த சூரிய கிரகணத்தை போல் இன்னொரு சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை நடைபெறாது என கூறப்படுகின்றது.
முதல் சூரிய கிரகணம்
வட அமெரிக்கா முழுவதும், நிகழவுள்ள இந்தக் கிரகணமானது, மசாட்லான், டோரியன், மெக்சிகோ சென், அன்டோனியோ, ஒஸ்டின் மற்றும் டல்லாஸ், டெக்சாஸ், லிட்டில் ராக், ஒர்கன்சாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட், ஓஹியோ, ரோசெஸ்டர், நியூயோர்க், பெர்லிங்டன், வெர்மான்ட், மாண்ட்ரீல் மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
எனவே சூரிய கிரகணத்தன்று கிரகண காலத்தில், யாரும் உணவு, தண்ணீரை உட்கொள்ளக்கூடாது என சொல்லப்படுகிறது. இப்படி செய்வதால் ஜீரண சக்தி பலவீனமடைந்து நோய்வாய்ப்படுவார்கள் என்பது ஐதீகம்.
பிறகு கிரகணம் முடிந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும். கிரகண காலத்தில் அனைத்து உணவு மற்றும் தண்ணீரிலும் துளசி அல்லது தர்ப்பை இலைகளை போட்டு வைக்கும் வழக்கம் உள்ளது.
உணவு மற்றும் தன்ணீரில் நச்சுத்தன்மை ஏற்படுவதை தடுக்க இவ்வாறு செய்யப்படுகிறது. கிரகண நாளில் எந்த சுப காரிய நிகழ்வையும் நடத்தக்கூடாது.
செய்யக்கூடாதவை
கிரகணத்தின் போது நகங்களை வெட்டுவது, முடியை சீவுவது, பல்துலக்குவது போன்ற செயல்களை தடுக்கவும். கிரகணத்தின் போது தூங்க கூடாது என்பது நம்பிக்கை.
இந்த விடயங்கள் காலங்காலமாக பின்பற்றி வரம் மரபே தவிர இவை எங்கேயும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சூரிய கிரகணத்தை தொலைபேசியில் புகைப்படம் எடுக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலரின் மனதில் எழுந்துள்ள நிலையில் அதற்கு நாசா பதிலளித்துள்ளது.
சூரிய கிரகணத்தை புகைப்படம் எடுத்தால் தொலைபேசி சேதமடையக்கூடும் என்று நாசாவின் புகைப்படத் துறை எச்சரித்துள்ளது.
I cannot for the life of me find a definitive answer to whether or not pointing a smartphone at the solar eclipse will fry the sensor
— Marques Brownlee (@MKBHD) April 4, 2024
Tempted to just take a phone I don't need and point it at the sun for 5 minutes to find out the real answer myself. In the name of science
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |