இன்றிரவு வானில் நிகழவுள்ள அதிசயம்
இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று நிகழவுள்ளது.
இன்றைய தினம் வானில் அரிதான வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) நிகழ உள்ளது. இந்த வளைய சூரிய கிரகணம் “நெருப்பு வளையம்” என்ற பெயராலும் அறியப்படுகிறது.
அப்போது, சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்லும் போது, அதன் விளிம்புகளைச் சுற்றி பிரகாசமான சூரிய ஒளி வட்டம் மட்டுமே தெரியும்.
நெருப்பு வளையம்
விண்வெளி ஆர்வலர்களுக்கு 2026-ம் ஆண்டுடிற்கான குறித்த அரிய சந்தர்பத்திற்காக காத்திருக்கிறது.

இந்த வகை கிரகணம் சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சற்றுத் தொலைவான நிலையில் இருக்கும் போது நிகழ்கிறது.
அந்த நேரத்தில் சந்திரன் வானில் சூரியனை விட சற்றுச் சிறியதாகத் தோன்றும். இதனால் சூரியனை முழுவதுமாக மூட முடியாமல், அதன் வெளிப்புற ஒளி வளையமாகத் தென்படுகிறது.
இதுவே வளைய சூரிய கிரகணத்தின் முக்கிய அடையாளமாகும். வானத்தில் ஒளிரும் வளையம் தோன்றும் காட்சி வானியல் உலகில் மிகவும் அழகான காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இது வெறும் கிரகணம் அல்ல இது வானில் ஒரு "நெருப்பு வளையத்தை" உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |