நெருக்கடிக்கு மூன்று நாட்களில் தீர்வு - எல்லே குணவங்ச தேரர்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Gota Go Home 2022
By Kanna
அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என நாட்டைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் வண. எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால் இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
அரசியல் தலைவர்கள் கட்சி பேதங்கள் இன்றி மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி