கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
தேசிய கடற்றொழிலாளர் மகா சமேளனத்தின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியினாலும், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனமாக உள்ளார்.
இந்த நெருக்கடிகளில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அண்மைய நாட்களாக இந்தியக் கடற்றொழிலாளர்களின்
எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள்
கடடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
