எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வை கோரி ஜனாதிபதியிடம் சென்ற தரப்பு
எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடியை ரத்து செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்கும் முயற்சியாக மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது, எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் குழு ஒன்றினால் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு மனு
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசிய எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள், இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து நியாயமான தீர்வை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு முன்னதாகவும் பல அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும், இந்த விவகாரத்தைத் தீர்க்க எரிபொருள் வணிக சங்கங்களின் சில பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இணக்கப்பாடுகள்
மேலும், சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்) மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) ஆகியவை எரிபொருள் விநியோகத்திற்காக தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும், குறித்த விடயத்தில் சினோபெக் மற்றும் ஐஓசியுடன் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
