கோட்டாபய பதவி விலகுவதே நெருக்கடிக்கு தீர்வு - பொருளாதார நிபுணர் அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதே தீர்வாகும் என பொருளாதார நிபுணர் விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
பிபிசி க்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் பதவி விலகுவது சரிவராது. அரச தலைவர் பதவி விலக வேண்டும். ஏனென்றால், இலங்கையின் அதிகாரங்கள் தீர்மானம் எடுக்கும் சக்தி நாடாளுமன்றத்தை விடவும் அரச தலைவருக்கே அதிகம் உள்ளது. அரசாங்கம் பதவி விலகி ஒன்றும் செய்ய முடியாது.
ஆகவே அரச தலைவர் பதவி விலகி வேறு ஒருவருக்கு பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அல்லது புதிய தேர்தலுக்குப் போக வேண்டும். அல்லது செய்யக்கூடிய ஆளுமை உள்ள மேலை நாடுகளின் செல்வாக்கு, மேலை நாடுகளின் அங்கீகாரம், மேலை நாடுகளின் பங்களிப்பு ஆகிய செல்வாக்கு உள்ள ஒருவருக்கு இந்த நாடு கையளிக்கப்பட வேண்டும்.
அப்படியாக இருந்தால் மாத்திரமே இலங்கை மீண்டெழ முடியும். அப்படி இல்லையென்றால், இலங்கைக்கு எந்த வித முன்னேற்றமும் வராது என மேலும் தெரிவித்தார்.
