சோமரத்ன ராஜபக்சவின் உயிரை காப்பாற்றும் கட்டத்தில் அநுரவின் ஆட்சி

Anura Kumara Dissanayaka Sri Lanka Law and Order
By Raghav Aug 05, 2025 09:24 AM GMT
Report

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை என தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச தனது மனைவி ஊடாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரியப்படுத்தியதன் மூலம் சிறையிலிருக்கும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தடுக்கப்பட்ட கருத்து! நாடாளுமன்றில் கொந்தளித்த சிறீதரன்

தடுக்கப்பட்ட கருத்து! நாடாளுமன்றில் கொந்தளித்த சிறீதரன்

சோமரத்ன ராஜபக்ச

சோமரத்ன ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம் போகம்பரை சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்சவை சந்தித்து அவரிடம் பல விடயங்களை கேட்டறிந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று அது தொடர்பான நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோமரத்ன ராஜபக்சவின் உயிரை காப்பாற்றும் கட்டத்தில் அநுரவின் ஆட்சி | Somaratne Rajapaksa S Life Is In Danger

இது இவ்வாறு இருக்கையில் சோமரத்ன ராஜபக்சவின் உயிரை பாதுகாக்க வேண்டிய தேவை தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் செம்மணியில் 135க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளியில் தெரியப்படுத்தக்கூடிய ஒரே ஒரு முக்கிய சாட்சியமாக சோமரத்ன ராஜபக்ச மட்டுமே உள்ளார்.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருக்கலாம் என தென்பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரது, உறவுகளும் தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்பினரும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களும் கூறுகின்றனர். எனது கருத்தும் காணாமல் ஆக்கப்பட்டோடரது உறவினர்களின் கருத்துகளோடு இணங்குகின்றது.

பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதன் உண்மை நிலைப்பாட்டை, உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை நேரில் அல்லது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கே உண்டு. அந்தவகையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு முக்கிய சாட்சியாக காணப்படுகின்றார்.

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து! அரசாங்கத்தை எச்சரிக்கும் தமிழ் எம்.பி

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து! அரசாங்கத்தை எச்சரிக்கும் தமிழ் எம்.பி

செம்மணி புதைகுழி

சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்திலேயே பல மர்ம முடிச்சுகள் அவிழக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. செம்மணி புதைகுழி குறித்து நீதியோடும், நியாயத்தோடும் செயல்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களின் எதிர்பார்ப்பாகவும் செம்மணி விவகாரம் காணப்படுகின்றது.

சோமரத்ன ராஜபக்சவின் உயிரை காப்பாற்றும் கட்டத்தில் அநுரவின் ஆட்சி | Somaratne Rajapaksa S Life Is In Danger

இவ்வாறான சூழ்நிலையில் அதன் உண்மை நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த முன்வரும் சோமரத்ன ராஜபக்சவை காப்பாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது.

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஒப்பானதாகவே கருதப்படும். அது அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறையை கட்டாயம் ஏற்படுத்தும்.

எனவே சர்வதேச விசாரணைகளுக்கான வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அனுமதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகள் விரைந்து சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்த வேண்டும்.

மாறப்போகும் தேசபந்துவின் தலைவிதி - ஆரம்பமான விவாதம்

மாறப்போகும் தேசபந்துவின் தலைவிதி - ஆரம்பமான விவாதம்

இனப்படுகொலை 

யுத்தத்தின் போது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஈழத்தில் வசிக்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் அவற்றினை தென்னிலங்கை தரப்புகள் தொடர்ச்சியாக மறுத்து வந்ததே வரலாறு. இன்று அவர்களது பகுதியில் இருந்தே ஒருவர் வாக்குமூலம் அளிக்க முன்வருகின்றார்.

சோமரத்ன ராஜபக்சவின் உயிரை காப்பாற்றும் கட்டத்தில் அநுரவின் ஆட்சி | Somaratne Rajapaksa S Life Is In Danger

அவர் தன் சார்ந்த முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்படும் சூழலில், வடக்கில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதனை தென் இலங்கை சமூகமும் அறிந்துகொள்ள முடியும்.

காலம் கனிந்து வந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற இருப்பதால் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்கள் அனைவரும் இப்போதாவது ஓரணியில் திரளுங்கள்.

கருத்து முரண் இல்லாமலும் தனி நபர் காழ்ப்புணர்ச்சியற்றும் ஒருமித்த குரலில் எம் மக்களது பேரிழப்பை, பெரும் வலியினை சர்வதேச அரங்கில் எடுத்துரையுங்கள். படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ தரப்பில் இருந்தே அதற்கான சாட்சியும் தற்போது கிடைத்திருக்கின்றது.

எனவே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அது ஒரு வரலாற்று தவறு மட்டுமல்லாது விடிவுக்காக போராடும் தமிழ் இனத்துக்கே நீங்கள் செய்யும் ஆகப்பெரும் துரோகமாக பார்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

செம்மணியில் நடந்த அட்டூழியங்கள் : நீதி கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்

செம்மணியில் நடந்த அட்டூழியங்கள் : நீதி கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்

ஈழத்தின் தனிச்சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் எட்டாம் நாள் திருவிழா

ஈழத்தின் தனிச்சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் எட்டாம் நாள் திருவிழா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017