மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்
கம்பஹா காவல்துறை எல்லைக்குட்பட்ட தம்மி பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண்ணொருவர் மருமகனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான லியனகே மேரி ஸ்வர்ணா என்பவரே உயிரிழந்துள்ளார்.
காணி தகராறில் ஏற்பட்ட கொலை

காணி தகராறு காரணமாக நேற்று (29) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த பெண் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகனான 43 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
விசாரணைகள் ஆரம்பம்

இது தொடர்பில், கம்பஹா பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் ரோஹன அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், உதவி காவல்துறை அத்தியட்சகர் துசித குமார மற்றும் கம்பஹா தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகர் மோகன் சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் மேலும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் மலிந்த குமார தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்